Advertisment

ஒன்றியக் கூட்டத்தில் கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி... துறையூரில் பரபரப்பு!

 Attempt to fire councilor at union meeting!

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஒன்றியக்குழு கூட்டத்தில், நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாகக் கூறி,4கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தேமுதிக கவுன்சிலர் சிவகுமார் என்பவர் (பெட்ரோல் ஊற்றி) தீக்குளிக்க முயற்சி செய்ததுபரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று ஒன்றியக்குழு கூட்டம், ஒன்றியக்குழு தலைவர் சரண்யா மோகன்தாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் அஜண்டாக்களை வாசித்தார். அப்போது நான்கு கவுன்சிலர்கள் (வரதராஜபுரம் அசோகன், சொரத்தூர் சிவகுமார், செல்லிபாளையம் சின்னம்மாள், வண்ணாடு லலிதா) நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாகவும், தங்கள் பகுதியில் தாங்கள் கூறிய வேலைகளை தேர்ந்தெடுக்காமல் வேறு வேலைகளுக்கு நிதி ஒதுக்குவதாகவும்கூறிதர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

 Attempt to fire councilor at union meeting!

திடீரென ஒன்றிய அலுவலகத்தை விட்டு வெளியே வந்த சொரத்தூர் கவுன்சிலர் சிவக்குமார்,தன்னுடைய தலையில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டிய ஒன்றியக்குழு தலைவரைக் கண்டித்து கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சித்தது, இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு வந்த துறையூர் காவல்துறையினர்அங்கிருந்தவர்களை அகற்றி, சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.

meetings thiruchy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe