attempt to break into an ATM machine;  near Avadi

சென்னை ஆவடி அருகே ஏடிஎம் இயந்திரத்தை கத்தி மற்றும் கவ் பாரால் உடைத்து பணத்தைத் திருட முயன்றவரை அக்கம் பக்கத்தினர் மற்றும் ரோந்து போலீசார் ஒன்று சேர்ந்து பிடித்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

சென்னை ஆவடி அருகே உள்ளது போத்தூர் பகுதி. அங்கு கனரா வங்கி ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று அதிகாலை ஏடிஎம்மில் தலையில் துண்டை கட்டிக் கொண்டு வந்த நபர் ஒருவர் ஏடிஎம்-ன் ஷர்ட்டரை சாத்திக்கொண்டு ஏடிஎமஐ உடைத்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசருக்கு தகவல் தெரிவித்த நிலையில் அந்த பகுதியில் ரோந்து பணியிலிருந்த போலீசார் உடனடியாக ஏடிஎம் மையத்திற்கு விரைந்தனர்.

Advertisment

அப்பொழுது ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துக் கொண்டிருந்த எட்வின் என்ற நபரை உடனடியாக காவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து பிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அந்த ஏடிஎம் மையத்திலிருந்த சிசிடிவி காட்சியில் எட்வின் திருட முயலும் காட்சிகள் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளை வைத்து போலீசார் எட்வினிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.