வேலூர் மாவட்டம் குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு பாபு என்பவர் இரவு காவலாளியாகப்பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில்வங்கிக்கு வெளியே பாபு உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் காவலாளி பாபு மீது பெட்ரோல் ஊற்றி தீயிட்டுக் கொளுத்தி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து அலறி அடித்து ஓடிய பாபு இது குறித்து குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். குடியாத்தம் நகர காவல்துறையினர் வங்கியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து குடிபோதையிலிருந்த சுண்ணாம்புபேட்டை பகுதியைச் சேர்ந்த சோபன் பாபு என்பவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.