Advertisment

திமுக ஊராட்சி மன்றத் தலைவர் மீது காரை ஏற்றி கொலை முயற்சி - ஒட்டன்சத்திரத்தில் பரபரப்பு!

Attempt to assassinate DMK panchayat leader by loading car!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே இருக்கும் அரசப்பிள்ளைபட்டி ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த சக்திவேல். இவர் ஊராட்சியில் ஆக்கிரமிப்பு நிலங்களை எடுப்பதற்காக தீர்மானம் நிறைவேற்றி ஆக்கிரமிப்பு நிலங்களை இன்று வட்டாட்சியர் தலைமையில்அகற்றுவதாக ஊராட்சியின் சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஒட்டன்சத்திரம் பழனியிலுள்ள பெட்ரோல் பங்க் அருகே சக்திவேல் ஒட்டன்சத்திரம் நோக்கி வந்து கொண்டிருந்த போது எதிரே காரில் வந்தவர்கள் சக்திவேல் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயற்சித்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சக்திவேல் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகிறார்கள் சேர்க்கப்பட்டுள்ளார். ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் மீதே கார் ஏற்றி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

local pazhani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe