An attempt to an ardent wife in a divorce case; The CCTV footage is shocking

Advertisment

தேனியில் விவாகரத்து வழக்கில் ஆஜராக வந்த மனைவி மீது கணவர் கார் ஏற்றிக் கொலை செய்ய முயன்றசம்பவம் தொடர்பான பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் வசித்து வந்த ரமேஷ்- மணிமாலா தம்பதியினர் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இருவரும் விவாகரத்து பெற போடிநாயக்கனூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்நிலையில் போடிநாயக்கனூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரான மணிமாலாஅங்கிருந்து பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது ரமேஷ் மற்றும் சிலர் பயணித்த கார் மணிமாலா மீது மோதியது. உடனடியாக அங்கிருந்தவர்கள் மணிமாலாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த சம்பவத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியான நிலையில் கணவர் ரமேஷ், பாண்டித்துரை உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.