கோவையில் ஈஷா மையத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் காட்டு யானை தாக்கியதில் இருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
கோவை சூலூர் வட்டம் செஞ்சேரிமலை பூரண்டம் பாளையத்தை சேர்ந்த துரைசாமி, சிவானந்தம், ஆறுமுகசாமி ஆகியோரை காட்டுயானை தாக்கியதில் துரைசாமி என்பவருக்கு கால் முறிவு மற்றும் தோள்பட்டையில் பலத்த அடி ஏற்பட்டது. அதேபோல் சினாந்தம் என்பவர் படுகாயமடைந்துமருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆறுமுகசாமி என்பவர் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-சிவா