புதுக்கோட்டையில் காதல் திருமணம் செய்த பெண்ணின் கணவரை தாக்கியதாக ஊராட்சி மன்ற தலைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் ஊராட்சியின் தலைவி ஜெயராணி. இவரது மகள் திவ்யா. இவர் அதே பகுதியில் வாழ்ந்து வந்த சதீஷ் என்ற நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தன்னுடைய மகள் மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்ட கோபத்தில் ஜெயராணி அவரது கணவர் மற்றும் அவரது உறவினர்கள் ஒன்று சேர்ந்து சதீஷினுடைய குடும்பத்தினரை தாக்கியுள்ளனர். இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராணி உட்பட 3 பேரை கீரனூர் போலீசார் கைது செய்தனர்.