style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
பொங்கல் பரிசு தொகை ரூபாய் ஆயிரம் நீதிமன்றத்தின் உத்தரவினால் நிறுத்தப்பட்டது. பொதுமக்களிடம் அதிர்ச்சியையும் அதை விட ஆளும் அரசியல்கட்சிகளுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பொங்கல் பரிசுகளை யார் முந்தி வாங்க வேண்டும் என்கிற அவசரம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இதில் குடிமகன்கள்உள்ளே புகுந்து பல இடங்களில் கலாட்டக்களை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் திருச்சியில்பொங்கல் பரிசு பொருட்கள் கொண்டு வந்த வி.ஏ.ஓ. மீதுதாக்குல் நடைபெற்றுள்ளது.
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுகனூர் அருகே உள்ள பெருவளப்பூர் கிராமத்தில் உள்ள ரேஷன்கடை மூலம் பொதுமக்களுக்கு பொங்கலையொட்டி வழங்குவதற்காக வேன் ஒன்றில் இலவச வேட்டி சேலை வந்தது.
அவற்றை ரேஷன் கடை ஊழியர்கள் வேனில் இருந்து கடைக்குள் இறக்கி வைத்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் , சின்னசாமி ஆகிய இருவரும் தங்களது செல்போனில் படம் பிடித்து உள்ளனர். இதைக்கண்ட பெருவளப்பூர் கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் மற்றும் பிகே அகரம் கிராமநிர்வாக அலுவலர் ஜீவா இருவரும் அவர்களை ஏன் செல்போனில் தேவையில்லாமல் படம் எடுக்கிறீர்கள் என்று கூறியுள்ளனர். இதில் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் செல்வகுமார் மற்றும் சின்னசாமி இருவரும் சேர்ந்து பிகே அகரம் கிராம நிர்வாக அலுவலர் ஜீவாவை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் சிறுகனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.