Attack in tea shop; Shop owner arrested

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பள்ளிப்பட்டு சமத்துவபுரத்தில் வசிக்கும் நரிக்குறவ சமூகத்தைச் சேர்ந்தவர் குப்பன். இவர் தனது பேரன் சித்தார்த்துடன் மங்கலம்பேட்டையில் அண்ணாதுரை (59) என்பவர் நடத்தி வரும் ஆப்பிள் என்ற டீ கடைக்குச் சென்று டீ கேட்டுள்ளார்.

Advertisment

அப்போது கடைக்குள் இருந்த தண்ணீர் குடத்தில் தண்ணீர் எடுத்து குடித்தாகக் கூறப்படுகிறது. இதனை பார்த்த கடை உரிமையாளர் அண்ணாதுரை நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த குப்பனை, 'உள்ளே வந்து எப்படி நீ தண்ணீர் எடுத்து குடிப்பாய்?' என மிரட்டியபடியே கடுமையாக அவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த நிலையில் குப்பன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுக்கொண்ட பின்னர், தீண்டத்தகாத வகையில்தன்னிடம் நடந்து கொண்டதாக கடை உரிமையாளர் அண்ணாதுரை மீது மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Advertisment

Attack in tea shop; Shop owner arrested

அதனைத் தொடர்ந்து மங்கலம்பேட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டுவன்கொடுமைதடுப்புச் சட்டத்தின் கீழ் கடை உரிமையாளர் அண்ணாதுரையை கைது செய்து சிறையில் அடைத்தனர். தேநீர் கடைக்குள் தண்ணீர் எடுத்துக் குடித்ததற்காக நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த நபரைதாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.