police

Advertisment

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே இருவேல்பட்டு கிராமத்தில் திருவெண்ணைய் நல்லூர் காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் செந்தில்குமார் (35) என்பவர் இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது பைக்கில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் தலைமை காவலர் செந்தில்குமாரை கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினர்.

படுகாயம் அடைந்த தலைமை காவலர் செந்தில்குமார், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காவலரை கத்தியால் குத்திய மூன்று நபர்களை உளுந்தூர்பேட்டை காவல் துணை கண்கானிப்பாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். தப்பி ஓடிய 3 பேரும் பேரங்கியூர் கிராமத்தை சேர்ந்த மணல் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.