Advertisment

கஞ்சா வியாபாரியைப் பிடிக்கச் சென்ற போலீசார் மீது கொலைவெறி தாக்குதல்; வெளியான பரபரப்பு காட்சிகள்

A attack on the police who went to catch a ganja dealer; Exciting scenes released

Advertisment

சென்னை கண்ணகி நகர் சுனாமி நகர் குடியிருப்பு 64ஆவது பிளாக்கில் வசித்து வரும் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளவர் உமாபதி. கஞ்சா விற்பனை செய்த வழக்கில் இதற்கு முன்பு கைது செய்யப்பட்டிருந்தார். விசாரணைக்குப் பிறகு சிறைக்குச் சென்று விட்டு வெளியே வந்த அவர், அந்தப் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களைக் கத்தியால் வெட்டி இருக்கிறார். இரண்டு தினங்களுக்கு முன்பு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கஞ்சா விற்பனை தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்ததால் இரண்டு பேரை அவர் கத்தியால் வெட்டியுள்ளார். இதுகுறித்து கண்ணகி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று மாலை கைது செய்ய முயன்றனர். அப்போது அங்கிருந்த கற்களை எடுத்து போலீசாரை கொடூரமாக தாக்கியுள்ளார்.இதனால் அதிர்ச்சியான பொதுமக்கள்,போலீசாரைக் காப்பாற்ற முயன்றனர். உடனே கடுப்பான அந்தக் கஞ்சா ஆசாமி, அந்தப் பகுதி மக்களுக்கும்மிரட்டல்விடுத்தபடி அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார். இது தொடர்பானவீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

attack police Cannabis Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe