Attack on police station - stir in Thirumangalam

மதுரை திருமங்கலம் அருகே காவல் நிலையத்தில் புகுந்து கும்பல் ஒன்று தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த டி.கல்லுப்பட்டி பகுதியில் உள்ளவேவே.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று நள்ளிரவில் முகமூடி அணிந்தபடி வந்த மர்ம நபர்கள் காவல் நிலையத்திற்குள் அத்துமீறி புகுந்து 'எதற்காக எங்கள் உறவினர்களை கைது செய்தீர்கள்' என ஆவேசத்துடன் காவல் நிலையத்தில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். அப்போது பணியில் இருந்த தலைமைக் காவலர் பால்பாண்டியை அக்கும்பல் தாக்கி உள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த தாக்குதலைநடத்தி இருப்பது தெரியவந்துள்ளது. அண்மையில் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த பிரபாகரனின் உறவினர்களை போலீசார் விசாரித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன்கூட்டாளிகளுடன் சேர்ந்து காவல் நிலையத்தில் தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது.