Skip to main content

ஊராட்சிமன்றத் தலைவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அ.தி.மு.க. பிரமுகர்கள்; மன்னார்குடி பரபரப்பு!

Published on 10/08/2020 | Edited on 10/08/2020

 

Tiruvarur district

 

மன்னார்குடி அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் மீதும், அவரது கணவர் மீதும் கொலை வெறி தாக்குதல் நடத்திய அ.தி.மு.க.வினரை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள ஏத்தகுடி ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராஜேஷ்வரி பன்னீர்செல்வம். மிகச் சிறுவயதில் ஊராட்சி மன்றத் தலைவரானதால் சுறுசுறுப்புடன் மக்களின் தேவைகளை உணர்ந்து பணி செய்து வருகிறார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் ஊ.ம.தலைவர் சத்தியமூர்த்தியும் அவரது ஆதரவாளர்கள் அமர்நாத், கோவிந்தராஜ் ஆகியோரும் தொடர்ந்து பன்னீர் செல்வத்திற்கும் அவரது மனைவிக்கும் கொலை மிரட்டல் விடுத்துவந்துள்ளனர்.

 

நேற்று பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு நள்ளிரவில் சென்ற அ.தி.மு.க.வினர், படுத்திருந்த பன்னீர்செல்வத்தைக் கொடூரமாக தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த பன்னீர்செர்வம் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பிறகு தஞ்சாவூருக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

 

ஊராட்சி மன்றத் தலைவரை தாக்கிய அ.தி.மு.க. பிரமுகர்களை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும், அ.தி.மு.க.வினருக்கு உதவியாக வழக்கை திசைதிருப்ப முயன்ற தலையாமங்கலம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் அறிவுடைநம்பியைப் பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தியும், குற்றவாளிகளைக் கைதுசெய்யாமல் அலைகழித்துவரும் காவல்துறையினரை கண்டித்தும் ஏத்தக்குடி ஊராட்சியைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் என 300க்கு அதிகமானோர் கூடிவந்து கண்டன முழக்கங்கள் எழுப்பி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

 

ஊராட்சி மன்றத் தலைவர் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யவில்லையெனில் மாவட்டம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தை நடத்துவோம் என போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்  எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

இதுகுறித்து ஏத்தக்குடியைச் சேர்ந்த ஒருவர் நம்மிடம் கூறுகையில், "சின்னவயதில் ஊராட்சி மன்றத் தலைவரானதால் மிக ஆர்வமாக மக்களைத் தேடிச் சென்று அவர்களுக்கு அரசு சார்பில் கிடைக்கவேண்டியதைச் செய்து கொடுத்துவருகிறார். இது கடந்த முறை ஊராட்சி மன்றத் தலைவருக்கு கோபத்தை உண்டாக்கியபடியே இருந்தது, ஊராட்சி மன்றத் தலைவர் மைனாரிட்டி சமுகத்தைச் சேர்ந்தவர். தாக்கிய அ.தி.மு.க.வினரோ ஆதிக்க சமுகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு அமைச்சரின் உறவினர் ஒருவர் சமுதாய ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் உதவுகின்றனர். அதனால்தான் மருத்துவமனையில் அடிபட்டு கிடந்த பண்ணீர்செல்வத்திடம் வாக்குமூலம் வாங்கச் சென்ற எஸ்.ஐ., அறிவுடைநம்பியும் வெற்றுப் பேப்பரில் கையெழுத்துப் போடச்சொல்லியும், நாங்க சொல்லுற பெயரை மட்டும் சொல்லு, நீ சொல்லுற பெயரை நாங்க ஏத்துக்கமுடியாது வழக்குப்போட முடியாது, எங்களுக்கு மேலிட பிரஷர் இருக்கு என அவர் கூறியதால்தால் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம்", என்கிறார்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'அரசியல் வேறுபாடு வன்முறையாக மாறக்கூடாது'- கல்வீச்சுக்கு முதல்வர் கண்டனம்

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
'Political difference should not turn into violence'- CM condemns stone pelting

ஆந்திராவில் தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கல் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனால் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வர இருக்கிறது. இதனால் அங்கு அரசியல் கட்சிகளால் தீவிர பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தனித்து களம் காண்கிறது. இதனையொட்டி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்த தேர்தல் பரப்புரையில் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல்வீசப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இந்தச் சம்பவத்திற்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், 'ஆந்திர முதல்வர் மீது கல் வீசப்பட்டதைக் கண்டிக்கிறேன். அரசியல் வேறுபாடுகள் வன்முறையாக மாறக்கூடாது. ஜனநாயக செயல்பாட்டில் ஈடுபடும் போது நாகரீகத்தையும், பரஸ்பர மரியாதையையும் நிலைநாட்டுவோம். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

ரூ. 1 கோடி பறிமுதல்; ஊராட்சித் தலைவர் மீது வழக்குப்பதிவு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Rs. 1 crore confiscation; Case registered against panchayat chairman

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் மாவட்டம் எட்டரை ஊராட்சி மன்றத் தலைவர் திவ்யா வீட்டில் ரூ.1 கோடி நேற்று (12.04.2024) தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. கைப்பற்றப்பட்ட ரூ.1 கோடி தொடர்பாக வருமான வரித்துறை விசாரித்து வந்தனர். அதனைத் தொடர்ந்து திவ்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.1 கோடி யார் மூலம் வந்தது என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. எட்டரை ஊராட்சி மன்றத் தலைவர் திவ்யா அதிமுகவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.