Advertisment

நங்கவள்ளியில் ஜவுளிக்கடை உரிமையாளர் மீது பட்டாக்கத்தி தாக்குதல்... சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!!

சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் துணிக்கடை உரிமையாளர் ஒருவரை பட்டாக்கத்தியால் வெட்டும் அதிர்ச்சிகர சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

சேலம் நங்கவள்ளி சேர்ந்த வேலுதங்கமணி என்பவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகராக அந்த பகுதியில் உள்ளார் அதே ஊரில் துணிக்கடை ஒன்றையும்நடத்தி வருகிறார். அந்த துணிக்கடைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை வந்தஇரு நபர்கள் வேலுதங்கமணியை திடீரென பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.

Advertisment

 attack on owner of a shop in Nangavalli ... CCTV footage released

பலத்த வெட்டுக் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வேலுதங்கமணிக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெட்டியவர்களைபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில்வேலுதங்கமணி மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

அதில் கடைக்கு துணி வாங்குவது போல் வரும் இரு நபர்கள் சாதாரணமாக வேலுதங்கமணியிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது நின்றுகொண்டிருந்த இருவரில் ஒருவர் பட்டா கத்தியை எடுத்து ஒருவரிடம்நீட்ட அவர் சரமாரியாக தங்கமணியை தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

attack Salem CCTV footage
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe