Advertisment

பெட்ரோல் திருடியதாக வடமாநில இளைஞர் மீது தாக்குதல்; வலிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு

 Attack on North State youth for stealing petrol

சேலம் அடுத்துள்ள சின்ன சீரகாபாடி பகுதியில் வடமாநில இளைஞர் ஒருவர் வாகனங்களில் பெட்ரோல் திருடியதாகப் பிடிபட்ட நிலையில் அவரை பொதுமக்கள் சரமாரியாகத்தாக்கினர். இதில் அந்த இளைஞருக்கு வலிப்பு ஏற்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

சேலம் மாவட்டம் அரியனுர் அடுத்துள்ளது சின்ன சீரகாபாடி கிராமம். இந்த கிராமப் பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் சிலர் பெட்ரோல் திருடுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பெட்ரோல் கேனுடன் நடமாடிய வடமாநில இளைஞர் ஒருவரை பிடித்த அந்தப் பகுதி மக்கள் இவர்தான் பெட்ரோல் திருடினார் என்று கையை கயிற்றால் கட்டி கடுமையாகத்தாக்கியுள்ளனர். இதனால் அந்த இளைஞருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. வலிப்பு ஏற்பட்ட நிலையிலும் மக்கள் தலைப்பகுதியில் கடுமையாகத் தாக்கினர். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

petrol Salem
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe