
சென்னையில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல்சென்றதற்காக தட்டிகேட்ட பயணியுடன் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் சண்டையிட்டு தாக்கி கொண்ட சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அண்ணாசதுக்கம் நோக்கி வந்து கொண்டிருந்த 2ஏ என்ற பேருந்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது தீவு திடலில் இறங்க வேண்டும் என ஒருவர்டிக்கெட் எடுத்துள்ளார். ஆனால் பேருந்து தீவு திடல் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவு சின்னம் அருகே உலா சிக்னலில் நின்றது. இதனால் இறங்கமறுத்த பயணி, ஏன் பேருந்தை உரிய நிறுத்தத்தில் நிறுத்தவில்லை எனக் கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நடத்துனரும் ஓட்டுனரும் இறங்கி பயணியை தாக்கினர். மேலும் அங்கிருந்த போக்குவரத்து காவலர்களிடம் ஒப்படைத்தார். பயணியும் ஓட்டுனர் மற்றும் நடத்துநரை தாக்கியுள்ளார். இதனால்அந்தஇடமே சற்று நேரம்பரபரப்பில் மூழ்கியது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Follow Us