Skip to main content

காதல் ஜோடியை சரமாரியாக தாக்கிய சகோதரர் போலீசில் சரண்

Published on 26/06/2019 | Edited on 26/06/2019

 

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ஸ்ரீரங்கராயன் ஓடை பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. அவரது மகன் கனகராஜ், உருளைக்கிழங்கு மார்கெட்டில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. 


இருவரும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர். இதனிடையே கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதையடுத்து, இரண்டு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து பிரித்து வைத்துள்ளனர். இந்நிலையில்,  கனகராஜ் வர்ஷினி பிரியாவை கடந்த வாரம் தனது தந்தை கருப்பசாமியிடம் அழைத்து சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து, கனகராஜின் தந்தை அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக உறுதி அளித்துள்ளார். 

  vinoth

                                                                                                 வினோத்


இதற்காக, அவர்கள் இருவரையும் வெள்ளிப்பாளையம் அருகே ஓர் இடத்தில் தங்கவைத்துள்ளார். கடந்த மூன்று தினங்களாக கனகராஜ் மற்றும் வர்ஷினி பிரியா இருவரும் ஒன்றாக இருந்துள்ளனர். இதனிடையே நேற்று மாலை கனகராஜ் தங்கியிருந்த பகுதிக்கு சென்ற அவரது அண்ணன் வினோத், பட்டியலின பெண்ணை திருமணம் செய்ய கூடாது என தம்பி கனகராஜிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கனகராஜை சராமாரியாக வெட்டியுள்ளார். இதில் கழுத்து, கை மற்றும் தலை பகுதியில் பலத்த வெட்டுபட்ட கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் வர்ஷினி பிரியாவையும் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில், வர்ஷினி சிகிச்சை பெற்று வருகிறார். வர்ஷினி உயிர் பிழைப்பதற்கு, 10 சதவிகிதம் தான் வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 


 

கொலை செய்த வினோத், மேட்டுப்பாளையம் போலீஸிடம் இன்று காலை சரணடைந்தார். இந்நிலையில் வர்ஷினி பிரியாவின் குடும்பதாருடன் 30 அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அம்மனுவில் கொலை குற்றத்திற்கு காரணமானவர்கள் மீது குண்டர் தடுப்பு  சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ,  உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அம்மனுவில் வலியுறுத்தியுள்ளனர். 
 

அப்போது உடன் இருந்த எவிடன்ஸ் கதிர் கோவை மண்டலத்தை ஆவணக் குற்றங்கள் நடைபெறும் மண்டலமாக அறிவிக்க வேண்டும், பாதிக்க்ப்பட்ட பெண்ணின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் ஐம்பது லட்சம் ரூபாய் வரை நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என வலியுறுத்தினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

 உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
happened to the young man on Treatment to reduce obesity in puducherry

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். 

இந்த நிலையில், உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் நேற்று முன் தினம் (22-04-24) அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.