
சேலத்தில் ஓடும் ரயிலில் காவலர் மீது மர்ம கும்பல் ஒன்று தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தர்மபுரி மாவட்டம் தாழநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் காவலர் ராஜவேலு. இவர் நேற்று ஜோலார்பேட்டைக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இருக்கையில் அமர்வது தொடர்பாக பொம்மிடியை சேர்ந்த வெங்கட் என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வெங்கட் தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்த நிலையில் பொம்மிடி ரயில் நிலையம் வந்ததும் 15 பேர் கொண்ட கும்பல் ரயிலில் எறி காவலர் ராஜவேலுவை கீழே இறக்கி சரமாரியாக தாக்கினார்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது. இந்த தாக்குதலில் காவலர் ராஜவேலுவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பாப்பிரெட்டிப்பட்டி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் விசாரணை செய்து வெங்கட், சக்தி சரவணன் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)