Advertisment

தேர்தல் தொடர்பான தகராறில் கூலிப்படையை ஏவி தாக்குதல்... முன்னாள் அரசு ஒப்பந்ததாரர் கைது!

சென்னை தியாகராய நகரில் உள்ள ஆந்திரா கிளப்பில் தேர்தல் தொடர்பான தகராறில் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட வரை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய சம்பவம் தொடர்பாக கூலிப்படை கைது செய்யப்பட்டுள்ளது.

Advertisment

Attack on election dispute ... Former government contractor arrested

சென்னை தி நகரில் உள்ளது ஆந்திரா கிளப்.இங்கு சுப்பா ரெட்டி என்பவர் தலைவராக உள்ளார். அதேபோல் சக்கரவர்த்தி என்பவர் செயலாளராகவும் உள்ளார். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ஆந்திரா கிளப்பிற்கு தேர்தல் நடத்தப்படும் இந்நிலையில் கடந்த பத்து வருடங்களாக அதற்கான தேர்தல் நடத்தப்படாமல் இருக்க நீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Attack on election dispute ... Former government contractor arrested

Advertisment

இதற்கான பொதுக்குழுவில் தொழிலதிபர் ஸ்ரீதர்ரெட்டி என்பவர் வரவு செலவு கணக்குகள் தொடர்பாக கேள்வி எழுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் குழம்பிப்போனர்கள் ஆந்திரா கிளப் நிர்வாகிகள்.இந்நிலையில் கடந்த ஆறாம் தேதி ஆந்திரா கிளப்பில் இருந்து தனியாக நடந்து வந்த ஸ்ரீதர் ரெட்டியை மர்ம கும்பல் ஒன்று நோட்டமிட்டு கிரிக்கெட் பேட்டால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் இந்த காட்சிகள் பதிவாகி இருந்தது. கிரிக்கெட் மட்டையால் தாக்கிய நபர் அவரை தாக்கிய பின்பு இரு சக்கர வாகனத்தில் காத்திருந்தவர் உடன் உடனடியாக அந்த இடத்தை விட்டு தப்பித்து சென்று விட்டார்.

Attack on election dispute ... Former government contractor arrested

Attack on election dispute ... Former government contractor arrested

இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை செய்த காவல்துறையினர் செய்யூரைச் சேர்ந்த ராஜேஷ், சுதாகர், கூலிப்படையை சேர்ந்த அருண்குமார், கோபி ஆகியோரை சுற்றி வளைத்தனர். அவர்களிடம்நடத்தப்பட்ட விசாரணையின் பேரில் ஸ்ரீதர் ரெட்டியை கொலை செய்ய கூலிப்படையை ஏவிவவர் முன்னாள் அரசு ஒப்பந்ததாரராக இருந்த ஜனார்த்தன ரெட்டி என்பது தெரியவந்து அவரையும் கைது செய்தனர். அதேபோல் இந்த வழக்கில் கூலிப்படையை சேர்ந்த மேலும் மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

arrest attack Businessman CCTV footage police
இதையும் படியுங்கள்
Subscribe