ADVERTISEMENT

முதியவரை தாக்கிய கஞ்சா போதை இளைஞர்கள்! முதலமைச்சர் தொகுதியில் அட்டூழியம்!

02:32 PM Jul 28, 2020 | rajavel

ADVERTISEMENT

புதுச்சேரியில் கடந்த ஓராண்டாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. இது தொடர்பான புகார்கள் எழும்போது மட்டும் போலீசார் சில இடங்களில் கஞ்சா விற்பனையை தடுத்து கஞ்சாவை கிலோ கணக்கில் பறிமுதல் செய்கின்றனர்.

ADVERTISEMENT

கஞ்சா திருட்டுத்தனமாக திருவண்ணாமலையில் இருந்து ரயில் மூலம் வருவதாகவும், பேருந்து மூலம் வருவதாகவும் எழுந்த புகாரை தொடர்ந்து போலீசார் அனைத்து வழித்தடங்களிலும் கஞ்சா நடமாட்டத்தை தடுத்தனர். இருப்பினும் ஆந்திர எல்லையில் இருந்து பெரிய பொட்டலமாக வரும் கஞ்சா சிறு,சிறு பொட்டலங்களாக மாற்றப்பட்டு இளைஞர்கள், மாணவர்களை குறிவைத்து விற்கப்படுகின்றன.

புதுச்சேரியில் முதலமைச்சர் தொகுதியான நெல்லிதோப்பு பகுதியில் இந்த கஞ்சா விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகளை சட்டமன்றத்திலேயே சட்டமன்ற உறுப்பினர்கள் முன் வைத்தனர். இதனை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று இரவு நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட பெரியார் நகரில் இரண்டு சிறுவர்கள் கஞ்சா குடித்துவிட்டு பொதுமக்களை தாக்கி உள்ளனர். அந்த பகுதியை சேர்ந்த சுந்தரம் என்பவர் வீட்டில் வளர்த்து வரும் கோழியை அப்பகுதியில் உள்ள இரண்டு சிறுவர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனை அவர் கண்டுபிடித்து தட்டி கேட்டபோது, முதியவர் என்றும் பாராமல் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

காரணம் அவர்கள் கடும் கஞ்சா போதையில் இருந்ததால் செய்வது என்னவென்று தெரியாமல் தாக்குதல் நடத்தியதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கஞ்சா வாங்குவதற்காக சிறுவர்கள் வீடுகளில் புகுந்து பொருட்களை திருடுவதை வழக்கமாக கொண்டிருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாற்றுகின்றனர்.

நகரத்தின் மையப்பகுதியான நெல்லித்தோப்பில், அதுவும் முதலமைச்சர் தொகுதியிலேயே கஞ்சா நடமாட்டம் அதிகளவில் இருப்பதாகவும், இங்கிருந்து பலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாகவும், தட்டிக்கேட்கின்ற மக்கள் மிரட்டப்படுவும், தாக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT