Advertisment

நடு சாலையில் காரை வழிமறித்து தாக்குதல்; கொள்ளை முயற்சி தொடர்பான பகீர் வீடியோ

Attack by overtaking a car in the middle of the road; Bagheer video related to robbery attempt

Advertisment

கோவையில் நடு சாலையில் காரை மறித்து பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் மதுக்கரை எல்என்டி பைபாஸ் அருகே இரவு நேரத்தில் கேரள பதிவெண்கொண்ட காரை நடுசாலையிலேயே கார் ஒன்று வழிமறித்து நின்றது. திடீரென அந்த காரில் இருந்து இறங்கிய முகமூடி அணிந்த நபர்கள் சிலர் வழிமறிக்கப்பட்டு நின்ற வானகத்தில் இருந்தவர்களை கையில் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் தாக்க முயன்றனர்.

மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான காட்சிகள் காரில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கார் டிரைவர் துணிச்சலாக செயல்பட்டதால் கொள்ளையர்களின் கொள்ளை முயற்சி தோல்வி அடைந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வடமாநிலங்களில் நடக்கும் சம்பவம் போன்றே கோவையில் நிகழ்ந்த சம்பவம் வாகன ஓட்டிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

kovai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe