Skip to main content

பிரியாணி கடை ஊழியர்கள் மீது தாக்குதல்: தேடப்பட்டு வந்த யுவராஜ் நீதிமன்றத்தில் சரண்!

Published on 20/08/2018 | Edited on 20/08/2018
dmk


சென்னை விருகம்பாக்கத்தில் பிரியாணிக் கேட்டு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் தேடப்பட்டு வந்த யுவராஜ் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

கடந்த மாதம் 29ம் தேதி இரவு நேரத்தில், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஆர்.ஆர்.அன்பு பிரியாணிக் கடைக்கு வந்த சிலர் இலவசமாக பிரியாணி கேட்டு கடை ஊழியர்களை மிரட்டியுள்ளனர். நேரமாகி விட்டதால் பிரியாணி இல்லையென கடைக்காரர்கள் கூறவே, வந்திருந்தவர்கள் கடை ஊழியர்களை சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து கடையின் மேலாளர் அருண் ஜஸ்டின் காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

விசாரணையில் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த யுவராஜ் மற்றும் அவரது நண்பர்கள் பிரியாணிக் கடை ஊழியர்களை தாக்கியது தெரியவந்தது. யுவராஜ் திமுகவைச் சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது. மேலும் யுவராஜ் பிரியாணிக் கடையில் ஊழியர்களை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் யுவராஜின் நண்பர்கள் கோ.மணிகண்டன், ராம் கிஷோர், கார்த்திக், ருத்ரகுமார் மற்றும் கல்லூரி மாணவர் சுரேஷ் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த யுவராஜ், திவாகர் மற்றும் சதீஷ் ஆகியோரை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் சுமார் 20 நாட்களுக்கு பிறகு தேடப்பட்டுவந்த யுவராஜ் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

சார்ந்த செய்திகள்