'attack on birth mother' - a brutal incident in public

சென்னையில் வயது முதிர்ந்த தாயை மகளே கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

எம்ஜிஆர் நகர் சூலைப்பள்ளம் பகுதியில் வசித்து வருபவர் ஆதிலட்சுமி. மூதாட்டியான இவருக்கு திரிலோகசுந்தரி என்ற மகள் இருக்கிறார். தாய்க்கும் மகளுக்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்து பிரச்சனை காரணமாக மோதல்போக்கு இருந்து வந்தது. இது தொடர்பாக பலமுறை மகள் திரிலோகசுந்தரி தாய் ஆதிலட்சுமியை தாக்கி வந்துள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக ஏற்கனவே எம்ஜிஆர் நகர் காவல்நிலையத்தில் பத்துக்கும் மேற்பட்ட புகார்களை தாய் ஆதிலட்சுமி தரப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த ஆறாம் தேதி தாய் ஆதிலட்சுமியை சாலை ஓரத்திலேயே வைத்து கொடூரமாக தாக்கியதுடன் கயிறு கொண்டு அவருடைய கழுத்தை நெரித்து கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் அந்த பகுதியில் உள்ள கடைகளில் பதிவாகியுள்ளது. அதில் கொடூரமாக தாயை மகள் கொடூரமாக தாக்கும் நிலையில் அங்கு இருந்தவர்கள் எவ்வளவோ தடுக்க முயன்றும் விடாப்பிடியாக தாயை கொலை வெறியுடன் தாக்கும் அதை வீடியோ காட்சிகள் தற்பொழுது வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.