Advertisment

கஞ்சா போதையில் அடுக்குமாடி குடியிருப்பு மீது தாக்குதல்;வைரலாகும் வீடியோ

An attack on an apartment complex under the influence of cannabis

மதுரையில் தமிழக அரசால் கட்டப்பட்ட புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை கஞ்சா போதையில் சிலர் அடித்து நொறுக்கும் காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisment

மதுரை ஆத்திகுளத்தில் தமிழக அரசின் வீட்டு வசதிதுறை சார்பாக சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பகுதியில் கஞ்சா போதையில் சுற்றித்திரிந்த 17 வயது சிறுவன் உட்படமூன்று இளைஞர்கள் குடியிருப்பு கட்டிடத்தின் கண்ணாடி ஜன்னல்களை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு தாறுமாறாக உடைத்துச் சேதப்படுத்தினர்.

Advertisment

அந்த பகுதியில் இருந்த பொதுமக்களால் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் அடிப்படையில் இரண்டு பிரிவுகளின் கீழ் அந்த கஞ்சா நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Cannabis madurai police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe