Skip to main content

மீண்டும் தாக்குதல்; நாகை மீனவர்கள் அதிர்ச்சி

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

 Attack again; Nagai fishermen are shocked

 

கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

 

நாகை மாவட்டம் செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த சபாபதி என்பவருக்கு சொந்தமான ஃபைபர் படகில் அவரது மகன்கள் நான்கு பேர் நேற்று இரவு கோடியக்கரை அருகே கடலில் வலை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இரண்டு அதிவேக படகுகளில் வந்த இலங்கை கடல் கொள்ளையர்கள் மீனவர்களின் பைபர் படகை சுற்றி வளைத்துள்ளனர். பின்னர் மீனவர்களின் படகுகளில் ஏறிய இலங்கை கடல் கொள்ளையர்கள் அவர்களது கழுத்தில் கத்தியை வைத்து இரும்பு ராடால் தாக்க தொடங்கியுள்ளனர். அதிர்ச்சி அடைந்த நாகை மீனவர்கள் அவர்களின் தாக்குதலை தடுத்துள்ளனர். ஆத்திரமடைந்த கடற்கொள்ளையர்கள் நான்கு மீனவர்களையும் சரமாரியாக தாக்கியதோடு படகுகளில் இருந்த மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள 500 கிலோ வலையை 50 ஆயிரம் மதிப்புள்ள மீன்கள் மற்றும் ஜிபிஎஸ் செல்போன் உள்ளிட்ட கருவிகளை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில் இன்றும் நாகையில் இருந்து கோடியக்கரை அருகே மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது இரண்டு படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி மீன்பிடி வலை மற்றும் உபகரணங்களை திருடிச் சென்றது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓய்ந்த புயல்; 8 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்ற மீனவர்கள்

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

 The Calming Storm; Fishermen who went to the sea after 8 days

 

வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக மாறியது. இந்த புயல் காரணமாகத் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்தது. அதனைத் தொடர்ந்து தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டியுள்ள பாபட்லாவிற்கு அருகே தீவிரப் புயலாக நேற்று (05.12.2023) மாலை 4 மணியளவில் மிக்ஜாம் புயல் கரையைக் கடந்தது.

 

இந்தநிலையில் 8 நாட்களுக்கு பிறகு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் இன்று மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். கடந்த மாதம் 27ஆம் தேதியிலிருந்து புயல் எச்சரிக்கை மற்றும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருந்தனர். புயல் கரையைக் கடந்ததைத் தொடர்ந்து இன்று மீன் பிடிக்கச் சென்றனர். நாகையில் அக்கரைப்பேட்டை,கீச்சாங்குப்பம் உள்ளிட்ட 25க்கும் அதிகமான கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். மீன் பிடிக்க தேவையான வலைகள், டீசல், ஐஸ் கட்டி, உணவு பொருட்கள் ஆகியவற்றை சேகரித்துக்கொண்ட மீனவர்கள், எட்டு நாட்களுக்குப் பிறகு இன்று மீன் பிடிக்க சென்றுள்ளனர். நாகை மட்டுமல்லாது கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.

 

 

 

 

Next Story

தப்பிய ஓடிய இலங்கை கடத்தல்காரர்கள்; சுற்றி வளைத்த தமிழக மீனவர்கள் - நடுக்கடலில் பயங்கரம்

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

Tamil Nadu fisherman chased away Sri Lankan smuggler in the middle sea

 

புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் கடற்கரை பகுதியில் இருந்து தொடர்ந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதும் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு தங்கம் கடத்தி வருவதும் வழக்கமாகிவிட்டது. கடந்த வாரம் இலங்கைக்கு கடத்த கொண்டு சென்ற 30 கிலோ கஞ்சா பண்டல்களையும் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

 

இந்த நிலையில்தான் நேற்று இரவு கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்திலிருந்து படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் நடுக்கடலில் ஒரு இலங்கை படகுடன் ஒரு இந்திய படகு அருகருகே நிற்பதைப் பார்த்த மீனவர்கள், அருகில் செல்லும் போது இந்திய படகில் இருந்து பண்டல்கள் இலங்கை படகுக்கு மாற்றியதும் வேகமாக சென்றுவிட்டனர். இலங்கை கடத்தல் படகில் வந்த அந்த 3 பேர் கொண்ட படகை விடாமல் துரத்திய மீனவர்களால், பிடிக்க முடியவில்லை.

 

அதே நேரத்தில் இந்திய படகில் இருந்து கஞ்சா பண்டல்களை இலங்கை படகில் மாற்றிய குமரப்பன்வயல் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் சங்கர்(32), செய்யாணம் பாண்டி மகன் ராஜதுரை (26) ஆகிய இருவரையும் கையோடு பிடித்து வந்த கோட்டைப்பட்டினம் மீனவர்கள், கடலோர காவல் போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து கோட்டைப்பட்டினம் டிஎஸ்பி உள்ளிட்ட போலீசார் நடத்திய விசாரணையில் பல திருக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

Tamil Nadu fisherman chased away Sri Lankan smuggler in the middle sea

 

இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரனையில், “ நான்(சங்கர்) டிப்ளமோ படித்துவிட்டு துபாயில் பல வருடங்கள் வேலை செய்தேன். பின்பு கொரோனா காலத்தில் ஊருக்கு வந்த நான், எனது தந்தையின் படகில் கடலுக்கு சென்று வந்த போது, கோட்டைப்பட்டினத்தில் ஷாப்பிங் சென்டர் நடத்திவருபவர் கொடுக்கும் பண்டல்களை நடுக்கடலில் நிற்கும் இலங்கை படகில் மாற்றி விட்டால், ஒரு முறைக்கு ரூ.20 ஆயிரம் பணம் கிடைக்கும் என்று, சங்கரின் சித்தப்பா ஆசை வார்த்தை கூறினார். அவரோடு சில முறை கஞ்சா பண்டல்களை கொண்டுபோய் மாற்றி விட்டோம்.

 

கஞ்சா பண்டல்களை தொடர்ந்து இலங்கைக்கு  கடத்தும் புதுக்கோட்டை பெண்ணிடம் நேரடியாக பேசும் போது, ஒரு முறை கடலுக்குள் போய் பண்டல்களை மாற்றினால் ரூ.50 ஆயிரம் கொடுக்கிறேன் என்றார். அப்படியே இப்போது பண்டல் கொண்டு போகனும், நீங்கள் கொண்டு போரிங்களான்னு கேட்டார். சரின்னு சொல்லி எங்க சொந்தக்காரரான, மலேசியாவில் இருந்து உறவினர் இறப்பிற்காக வந்த ராஜதுரையை அழைத்துகொண்டு, வன்னிச்சிப்பட்டினத்தில் செந்தில் என்பவரின் உணவு தயாரிப்பு கூடத்தில் இருந்து தலா 20 கிலோவில் 6 பண்டல்களை எடுத்துக் கொண்டு 5 நாட்டிக்கல் மைலில், அவங்க அடையாளம் சொன்ன இலங்கை படகில் மாற்றி விட்டோம். இது வரை 6 முறைக்கு மேல் கடத்தி இருக்கிறோம். 

 

இந்த கஞ்சா பண்டல்கள் புதுக்கோட்டை பெண் நேரடியாக கோட்டைப்பட்டினம் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் நடத்தி வருபவர் மூலமாக இலங்கை பேசாலை நீயூட்டன், ராஜ் ஆகியோருக்கு அனுப்புறாங்க. எங்களுக்கு நடுக்கடலுக்குள் கொண்டு போய் மாற்றி விட கூலி கொடுப்பாங்க. ஆனால் இந்த முறை நாங்க மாற்றும் போது கோட்டைப்பட்டினம் மீனவர்கள், நாங்கள் கஞ்சா பண்டல் மாற்றும் போது பார்த்துட்டு விரட்டினாங்க. இலங்கை கடத்தல் படகு வேகமாக போயிட்டாங்க. ஆனாலும் நம்ம மீனவர்கள் விடாமல் விரட்டினாங்க. ஆனால் அவங்களை பிடிக்க முடியல. உடனே எங்களை பிடிச்சு வந்து உங்களிடம் ஒப்படைச்சுட்டாங்க” என்றார்.