Atrocity of young people by giving alcohol to the girl in cold drink!

Advertisment

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த ஆண்டு அவரது உறவுக்கார இளைஞர் தைலமரக்காட்டிற்கு அழைத்துச் சென்றதாக தெரிகிறது. அப்போது சிறுமிக்கு குளிர்பானத்தில் மது கலந்துகொடுத்துரங்கநாதன் மற்றும் அவரது நண்பர்களான மணிகண்டன், கணேஷ் உட்பட ஐந்து பேர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவுகொடுத்துள்ளனர்.

அதனை செல்போனில் வீடியோவாகவும் படமெடுத்து மிரட்டிவெவ்வேறு இடங்களில் மூன்று முறை பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், சிறுமிக்கு அவரது பெற்றோர் வேறொரு இளைஞருடன்திருமணம் செய்து வைத்தனர்.

Advertisment

தகவலறிந்து வந்த காவலர்கள் சிறுமியை மீட்டுதிருச்சியில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர். சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதால்அதில் ஒருவர் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

சிறுமி அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல்துறையினர்ரங்கநாதன், கணேஷ், மணிகண்டன் ஆகியோரை போக்சோசட்டத்தின் கீழ் கைது செய்துமேலும் இரண்டு இளைஞர்களைதேடி வருகின்றனர்.