Advertisment

குத்தகை கண்மாயில் மீன் பிடித்ததற்கு அரை நிர்வாணமாக்கி தாக்குதல்; ராஜபாளையத்தில் கொடூரம்

Atrocity in Rajapalayam; viral video

ராஜபாளையத்தில் குத்தகைக்கு எடுத்த கண்மாயில் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீன்பிடித்ததற்காக, மீன்பிடித்த மூன்று பேரை அரை நிர்வாணமாக்கி கும்பல் கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பல்வேறு தரப்பினரும் இதற்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முடங்கியாரோடு பகுதியில் அமைந்துள்ளது மருங்கூர் கண்மாய். இந்த கண்மாயை சுந்தரராஜபுரத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் குத்தகைக்கு எடுத்து மீன் பிடித்து வந்துள்ளார். குத்தகை காலம் முடிந்த நிலையில் வேறு சிலர் அங்கு மீன் பிடித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை ராஜபாளையம் பத்தாவது வார்டுக்கு உட்பட்ட சோமையாபுரம் பகுதியைச் சேர்ந்த அன்பழகன், சூர்யா, மனோகரன் உள்ளிட்டோர் கண்மாயில் இறங்கி மீன் பிடித்துள்ளனர்.

Advertisment

Atrocity in Rajapalayam; viral video

இதனையறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராஜ்குமார் தலைமையிலான 15 பேர் கொண்ட கும்பல் மீன் பிடித்த இளைஞர்கள் அரை நிர்வாணமாக்கி மண்டியிட வைத்து கட்டையால் கொடூரமாக தாக்கினர். அந்த வீடியோ காட்சியில் ''அண்ணே அண்ணே வேணாம் அண்ணே கால் வலிக்குது முடியலைண்ணே'' என இளைஞர்கள் கதறும் கூச்சல் சத்தம் கேட்போர் மனதையே உறைய வைக்கிறது. ராஜ்குமார் கும்பலைச் சேர்ந்த ஒரு இளைஞர் இதை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்ட நிலையில், தற்போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட ராஜ்குமார் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் மேலும் 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Rajapalayam Virudhunagar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe