Advertisment

அரசுப் பேருந்தில் அட்ராசிட்டி; மாணவர்கள் பையை பரிசோதித்த போலீசாருக்கு அதிர்ச்சி

Atrocity on Government Bus; The police were shocked when they checked the bag

Advertisment

சென்னையில் மாநகரப் பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவர்களின் பையில் மதுபானம் கலந்த குளிர்பானங்கள் மற்றும் ஆயுதங்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூந்தமல்லியில் இருந்து திருவெற்றியூர் செல்லும் 101 என்ற எண் கொண்ட மாநகரப் பேருந்தில் நேற்று கடற்கரை பேருந்து நிலையத்தில் சில கல்லூரி மாணவர்கள் ஏறியுள்ளனர். அப்பொழுது ஆபாசமான பாடல்களைப் பாடி பயணிகளை மாணவர்கள் தொந்தரவு செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுநர் தட்டிக் கேட்டுள்ளார். அவரை மாணவர்கள் மிரட்டியதால் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

உடனடியாக அங்கு வந்த திருவொற்றியூர் காவல்நிலைய போலீசார் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது மதுபானம் கலந்த குளிர்பான பாட்டில்கள் மற்றும் இரண்டு கத்திகள் இருந்தது போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 11 மாணவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை காவல் வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe