Advertisment

பூ விற்கும் பெண்ணின் துணிச்சலால் தப்பிய மக்கள் பணம்!  

ATM theft police investigation

திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் கனரா வங்கியின் ஏ.டி.எம் ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்த ஏ.டி.எம்மிற்கு நேற்று இரவு இரண்டு இளைஞர்கள் வந்துள்ளனர். அவர்கள், சில கருவிகளின் உதவியுடன் எ.டி.எம். இயந்திரத்தின் கீழ் பாகத்தை பெயர்த்து முழுவதையும் எடுத்துள்ளனர். பணப்பெட்டியை எடுக்கும் நேரத்தில், அங்கு பூ வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு பெண் இதனை கவனித்து சத்தம் போட்டுள்ளார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து அந்த இரு இளைஞர்களும் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைக்கவும் மாநகரம் முழுவதும் உஷார் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த இருவரையும் சி.சி.டி.வி உதவியுடன் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Advertisment

ATM trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe