Advertisment

100 ரூபாய் கேட்டால் 500 ரூபாய் கொடுத்த ஏ.டி.எம்; புதுக்கோட்டையில் பரபரப்பு!

ATM in Pudukkottai gave 500 rupees when asked for 100 rupees

புதுக்கோட்டை கீரனூர் பகுதியில் தனியார் வங்கியின் ஏ.டி.எம் இயந்திரம் ஒன்று உள்ளது. இந்த நிலையில் அந்த ஏ.டி.எம் இயத்திரத்தில் நேற்று பணம் எடுக்க வந்தவர்களுக்கு 100 ரூபாய்க்கு பதில் 500 ரூபாய் வந்துள்ளது. இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்தச் செய்தி காட்டு தீ போன்று பரவ பலரும் அந்த ஏ.டி.எம் இயத்திரத்தில் பணம் எடுத்துள்ளனர். அப்போது அவர்களுக்கு 100 ரூபாய்க்குபதில் 500 ரூபாயை இயந்திரம் தந்துள்ளது.

Advertisment

இதனையடுத்து தகவலின் பேரில் சம்பந்தப்பட்ட ஏ.டி.எம் வங்கியின் ஊழியர்கள் இயந்திரத்தை பரிசோதனை செய்தனர். அதில் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் வைக்க வந்த ஊழியர்கள் 100 ரூபாய் நோட்டுகள் வைக்க வேண்டிய இடத்தில் 500 ரூபாய் நோட்டுகளை வைத்ததால் தான் இந்தக் குளறுபடி நடத்தாக தெரிவித்தனர். பின்பு அது சரிசெய்யப்பட்டது.

Advertisment

இந்தக் குளறுபிடியால் ஏ.டி.எம்மில் இருந்து ரூ.2 லட்சததிற்கு மேல் பணம் எடுக்கப்பட்டுள்ளது. சிலர் தவறுதலாக வந்த பணத்தை சம்பந்தப்பட்ட வங்கியில் மீண்டும் ஒப்படைத்தாக கூறப்படுகிறது. அப்படி ரூ.60 ஆயிரம் வரை வந்துள்ளதாக கூறப்படுகிறது. மீதமுள்ள பணத்தைத்திரும்ப பெற அந்த நேரத்தில் ஏ.டி.எம்மில் பணம் எடுத்தவர்களின் வங்கி கணக்குகளை ஆராய்ந்து வருகின்றனர்.

pudukkottai ATM
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe