உடைக்க முடியாததால் ஏ.டி.எம் இயந்திரத்தை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்!

ATM machine incident in Tirupur!

திருப்பூர் மாவட்டத்தில் தனியார் வங்கிக்குசொந்தமான ஏ.டி.எம் இயந்திரம் தூக்கிச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சாலையில்கூலிபாளையம் நான்குமுனை சந்திப்பில் உள்ள பேங்க் ஆஃப் பரோடா என்ற தனியார் வங்கியின் ஏ.டி.எம் இயந்திரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம்-ஐ உடைத்துஉள்ளே உள்ள பணத்தைகொள்ளையடிக்க முயற்சித்த மர்ம நபர்கள் ஏ.டி.எம்-ஐ உடைக்க முடியாததால் இயந்திரத்தை அப்படியே தூக்கி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் அருகில் இருக்கும் சிசிடிவி காட்சிகள் மற்றும் ஏ.டி.எம் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ATM CCTV footage police Robbery thirupur
இதையும் படியுங்கள்
Subscribe