Advertisment

1000 ரூபாய் கேட்டால் 3000 ரூபாய் கொடுத்த ஏடிஎம்; வேலூரில் பரபரப்பு

ATM that gives 3000 rupees if you withdraw 1000 rupees due to mechanical failure

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நான்கு முனை கூட்ரோடு பகுதியில் ஸ்டேட் பாங்குக்கு சொந்தமான ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. இரவு இங்கு கார்டு போட்டு 1000 ரூபாய் கேட்டு எண்டர் செய்தால் அது ஆறு 500ரூபாய் நோட்டுகள் என மூன்று ஆயிரம் ரூபாய் தந்துள்ளது. இதனை அறிந்த பலர் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

இதுகுறித்து குடியாத்தம் நகர காவல்துறையினருக்கும் வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட ஏ.டி.எம் மையத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் வங்கி அதிகாரிகள் ஏடிஎம் மையத்தில்தற்காலிகமாக சோதனை மேற்கொண்டு ஏடிஎம் மையத்தை மூடினர்.

Advertisment

இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் விசாரித்த பொழுது, தொழில்நுட்ப கோளாறால் ஆயிரம் ரூபாய்க்கு பதில் 3 ஆயிரம் ரூபாய் வந்ததாகவும் ஒரு 500 ரூபாய் நோட்டும் ஐந்து100 ரூபாய் நோட்டுகள் வரவேண்டியதற்கு பதிலாக ஆறு 500 ரூபாய் நோட்டுகள் வந்திருக்கலாம் எனவும், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

Vellore rupees ATM
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe