ADVERTISEMENT

"தடகள வீராங்கனை ரேவதி இளைய சமுதாயத்திற்கு நம்பிக்கையை விதைத்துள்ளார்"- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு!

10:21 PM Aug 12, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தமிழகத்திற்கு குறிப்பாக மதுரைக்கு பெருமைச் சேர்த்த தடகள வீராங்கனை ரேவதி வீரமணிக்கு அவர் பயின்ற டோக் பெருமாட்டி கல்லூரியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்று பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "ஒலிம்பிக் போட்டி என்பது உலக அளவில் விளையாட்டுத் துறையின் உச்சத்தைக் குறிக்கிறது. அதன் அடிப்படையில் ஒருவர் அப்போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெறுவது என்பதே அவரை பலருக்கு முன்னுதாரணம் ஆக்குகிறது. எனவே, ரேவதியின் மிகப்பெரிய பங்களிப்பு என்பது தமிழ்நாட்டில் உள்ள பல பெண்களுக்கு இளைஞர்களுக்கு அவர் நம்பிக்கையை விதைத்திருக்கிறார் என்பதே.

ADVERTISEMENT

ரேவதியிடம் சில தனித்துவங்கள் உள்ளது. பெரும்பாலும் வாழ்வில் ஒருவர் எங்கிருந்து தொடங்குகிறது என்பது அவரது எல்லையை நிர்ணயிக்கிறது. எனவே என்னைப் போன்ற நல்ல கல்வி பொருளாதார சூழல் , முன்னோர்களின் பின்புலமுள்ள வெகு சிலருக்கு நான் இன்று இருக்கும் நிலையை அடைவது என்பது பெரிய விஷயம் இல்லை. ஆனால் ரேவதி தனக்கான புதிய பாதையை வகுத்துக் கொண்டவர். மிக சாதாரண பின்புலத்தில் பிறந்து தற்போது அவர் அடைந்திருக்கும் உச்சம் என்பது ஒப்பீட்டளவில் உயர்ந்த இடத்தில் தோன்றி அதை விட உயர்வான இடத்தை அடைவதை காட்டிலும் மிகக் கடினமானது.

ரேவதி தன் தொடங்கிய இடத்திலிருந்து இன்று அடைந்திருக்க உச்சம் என்பது அசாதாரணமானது. அதற்காக நான் அவரை வாழ்த்துகிறேன். அவரை இந்த நிலைக்கு உயர்த்த பாடுபட்ட அவரது பயிற்சியாளர், அவரது குடும்ப நண்பர்கள் என அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். நமது முதல்வர் முந்தைய அரசாங்கங்களை விட ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்களுக்கு அதிகமான நிதியுதவி, பரிசுகள் மற்றும் அரசு வேலை வாய்ப்புகளை வழங்கி உள்ளார். தொடர்ந்து நமது இளைஞர்கள் தங்களின் திறமையை வளர்த்துக் கொள்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் கிடைக்கும் அளவிற்கு நாம் பணியாற்ற வேண்டும்". இவ்வாறு நிதியமைச்சர் கூறினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT