Advertisment

பாலியல் புகார்... தடகளப் பயிற்சியாளர் நாகராஜனுக்கு குண்டர்!

Athlete coach Nagarajan Case

Advertisment

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

Advertisment

சென்னை கே.கே நகரில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளியில் ஆசிரியர் ராஜகோபால் ஆன்லைன் வகுப்பின் போது மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டது தொடர்பாக புகார்கள் வெளியாகி கைது செய்யப்பட்டார்.அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளில் ஆசிரியர்களால் நடந்த பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான புகார்களை காவல்துறையிடம் தெரிவித்து வருகின்றனர். அதனடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அதேபோல் கடந்த மாதம் 28ஆம் தேதி பாலியல் புகாரில் தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் கைது செய்யப்பட்டு புழல்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபால் மீது குண்டர் சட்டம் போடப்பட்ட நிலையில், தற்போது தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. நாகராஜன் மீது 6 புகார்கள் வந்ததுள்ள நிலையில் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Investigation police Sexual Abuse
இதையும் படியுங்கள்
Subscribe