Skip to main content

அத்திவரதர் தரிசனம் நாளையுடன் நிறைவு! 2050ல்தான் மீண்டும் அத்திவரதர் தரிசனம்!

Published on 15/08/2019 | Edited on 15/08/2019

 

 காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் அத்திவரதர் உற்சவம் 45 நாட்களை கடந்து இன்று 46வது நாளாக நடைபெற்று வருகிறது.    முதல் 31 நாட்கள் சயன கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் இந்த மாதம் 1-ந் தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார்.

 

a


அத்திவரதரை இதுவரை சுமார் 1 கோடி பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.   நாளை 16ம்தேதி வெள்ளிக்கிழமை   மட்டுமே தரிசனம் செய்யலாம் என்று உள்ள நிலையில் இன்று சுதந்திர நாள் விடுமுறை காரணமாக சுமார் 6 லட்சம் பக்தர்கள் காஞ்சியில் குவிந்தனர்.  46-வது நாளான இன்று அத்திவரதர் மலர்களால் புஷ்ப அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.    

 

6 லட்சம் பக்தர்கள் குவிந்ததால்,  அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவரும் மாவட்ட நிர்வாகமும்,   பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையும் திக்குமுக்காடியது.  இந்த நிலையில் இன்று மதியம் 1 மணிக்கு மேல் கருட சேவை நடைபெற்றதால் அனைத்து தரிசனங்களும்  நிறுத்திவைக்கப்பட்டன.  அதே போல சிறப்பு தரிசனமான    சிவப்பு விஐபி டோனர் பாஸ் மற்றும்  பச்சை நிற விவிஐபி டோனர் பாஸ் இரண்டும் செல்லாது என மாவட்ட ஆட்சியர் பொன்னையா அதிரடியாக அறிவித்தார்.    நாளை பொது தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும்,  மற்ற எந்த ஒரு சிறப்பு தரிசனமும் கிடையாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.

 

  கூட்ட நெரிசலை தவிர்க்க நாளை வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை மட்டுமே பொது தரிசனமும் அனுமதிக்கப்படும்.     நாளை நள்ளிரவு முதல் அனைத்து தரிசனுமும் ரத்து செய்யப்படுகிறது.   வரும் ஆகஸ்ட் 17 அன்று வரதராஜபெருமாள் கோவில் ஆகம விதிகளின் படி  அத்திவரதரை அனந்தசரஸ்  குளத்தில் வெள்ளிப்பெட்டியில் வைத்து அத்திவரதர் வைக்கப்படுகிறார்.  இதன் பின்னர் 40 ஆண்டுகள் கழித்து 2059ல் தான் அத்திவரதரை தரிசிக்க முடியும். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

அத்திவரதருக்கு சிறப்பு செய்த சசிகலா! ஒத்துழைப்பு கொடுத்த அதிமுக!

Published on 22/08/2019 | Edited on 22/08/2019

சசிகலாவுக்கு அத்திவரதரை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கலனாலும் சிறப்பு அலங்காரம் செய்ய சசி தரப்புக்கு வாய்ப்பு கிடைத்தது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இது பற்றி விசாரித்த போது, நேரில் தான் சசிகலா வர முடியவில்லை. மத்த படி சசி தரப்பிலான சிறப்பு அலங்காரங்கள் பூசைகளுக்கு குறைவில்லை. கடந்த ஜூலை 1-ந் தேதி முதல் ஆகஸ்ட் 16-வரை கிடந்த கோலத்திலும் எழுந்த கோலத்திலும் காட்சி கொடுத்த அத்திவரதரை ஏறத்தாழ 1 கோடி பேர் தரிசனம் பண்ணியிருக்காங்க. இதைத் தொடர்ந்து 17-ந் தேதி நள்ளிரவு 11:55-க்கு அத்திவரதர் அங்குள்ள திருக்குளத்தில் பழையபடி நீருக்குள் கிடத்தப்பட்டிருக்கார். இனி 40 வருடம் கழித்து 2059-ல் தான் அவரைப் பார்க்க முடியுமாம். 
 

admk



இந்த முறை தரிசனத்தின் கடைசி நாட்களில் செம கூட்டம் இருந்தது. அதனால் பக்தர்கள் நிழலில் நின்றபடி வரிசையா வருவதற்கு வசதியா 2 கி.மீ. தூரத்துக்குப் பந்தல் போடப்பட்டது. அதுவரை 3 வரிசையில் அனுப்பப்பட்ட பக்தர்கள், 5 வரிசையில் அனுமதிக்கப்பட்டாங்க. சாம்பிராணியை தைலம் போல காய்ச்சி அத்திவரதருக்குப் பூசி, நீல நிற பட்டாடையில் துளசி பட்டாடையுடன் அவர் காட்சியளித்தார். இந்தப் பந்தல், பட்டாடை, மற்ற அலங்காரங்கள் எல்லாமே சசிகலா செலவுதானாம். அத்திவரதருக்கு செய்த சிறப்பு அலங்காரம் மூலம் தனக்கு அனுக்கிரகம் கிடைத்து சீக்கிரம் ரிலீஸ் ஆயிடலாம்னு சசி நினைக்கிறாராம். மேலும் சசிகலா தரப்புக்கு அதிமுக தரப்பில் இருந்து எந்த ஒரு எதிர்ப்பும் வரவில்லையாம். சசிகலாவிற்கு தரிசனம் கிடைத்ததா இல்லையா என்று டிசம்பர் மாதம் வரை பொறுத்து இருந்து பார்க்கலாம் என்று அரசியல் வட்டாரங்களும் கூறிவருகின்றனர்.

Next Story

எடப்பாடிக்கு கிடைத்த இரண்டு அதிர்ஷ்டம்! உச்சகட்ட மகிழ்ச்சியில் எடப்பாடி!

Published on 20/08/2019 | Edited on 20/08/2019

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக கட்சி ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என்று பிரிந்தது. பின்பு சசிகலா முதல்வர் பொறுப்பிலும், கட்சி பொறுப்பிலும் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை உறுதியானதால் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட்டர். அதன் பின்பு எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து ஓபிஎஸ்ஸை கட்சிக்குள் இணைத்து சசிகலா, தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கினார்கள். கட்சியையும், ஆட்சியையும் தனது வசமாக எடப்பாடி கொஞ்சம், கொஞ்சமாக மாற்றினார்.


  mgr



இதே போல் எடப்பாடிக்கு மேலும் இரண்டு அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. அதாவது அதிமுக கட்சி நிறுவன தலைவர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவினை முதல்வர் எடப்பாடி பழனிசாமியே தலைமை தாங்கி  நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. அதனால் 2017-ம் ஆண்டு, இந்த நூற்றாண்டு விழாவை தமிழகத்தில் இருக்கும் அனைத்து மாவட்டத்திலும் தலைமை வகித்து விழாவை சிறப்பாக நடத்தினார். எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில் எதிர் கட்சி தலைவர் பெயரையும் சேர்த்து அச்சடித்தார். 

 

admk



அதே போல் 40 வருஷத்துக்கு ஒருமுறை மட்டுமே தரிசனம் தரக்கூடிய அத்திவரதர் நிகழ்வின் போதும் முதல்வராக இருந்த பெருமை எடப்பாடிக்கு கிடைத்துள்ளது. அதாவது, அத்திவரதர் வைபவ கல்வெட்டிலும் எடப்பாடி பழனிச்சாமியின் பெயர் இடம்பெற்றுள்ளதும் பெருமை வாய்ந்தவையாகவே கருதப்படுகிறது. அந்த கல்வெட்டு அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு எந்த முதல்வர் பெயரும் அந்த கல்வெட்டில் இல்லை என்பது குறிப்படத்தக்கது.