40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சி தரும் அத்திவரதர் தற்போது தண்ணீரில்இருந்து வெளியே எடுக்கப்பட்டு முதலில் சயன கோலத்திலும், தற்போது நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

Advertisment

athivarathar visitors count

40 நாட்கள் மட்டுமே அத்திவரதரை காண முடியும் என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை காண காஞ்சிபுரத்திற்கு குவிந்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 38 நாட்களில் 70.25 லட்சம் பேர் அத்திவரதரை தரிசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக நேற்று 3.70 லட்சம் பேர் அத்திவரதரை தரிசித்துள்ளனர்.

இந்நிலையில் வரும் 17 ஆம் தேதியுடன், அத்திவரதர் தரிசனம் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து கடைசி நாளான 17 ஆம் தேதி அத்திவரதருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளதால், அன்று தரிசனத்திற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.