நாளையொடு முடிகிறது அத்திவரதர் தரிசனம்; உயர்நீதிமன்றத்தில் புதிய பொதுநல மனு!

காஞ்சி அத்திவரதர் தரிசனம் நாளையோடு முடிகின்ற நிலையில், விஐபிமற்றும் விவிஐபி பாஸில்செல்பவர்கள் இன்று மாலை 5 மணி வரை அத்திவரதரைதரிசிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை முதல் இரண்டு லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.3 லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்காக காத்து இருக்கின்றனர். நாளையோடு அத்திவரதர் வைபவம் முடிவடைய இருக்கிறது. இன்றுடன் விஐபி, விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக நிர்வாகம் சார்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

athivarathar

இந்நிலையில் தரிசனத்தை நீட்டிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 40 நாட்கள் தரிசனத்திற்கு அத்திவரதரைவைக்க வேண்டும் என எந்த ஆகம விதிகளும் இல்லாத நிலையில் உற்சவத்தை நீட்டிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வசந்தகுமார் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு நாளை விசாரணைக்கு வரவிருக்கிறது. ஒரு நாளைக்கு 5 லட்சம் பேர் அத்திவரதரைதரிசிக்க வரும் நிலையில்லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

athivarathar highcourt kanjipuram
இதையும் படியுங்கள்
Subscribe