Advertisment

தேசிய அளவில் விருது பெற்ற குறும்படம்; படக்குழுவினருக்கு முன்னாள் நீதிபதி வாழ்த்து

atcham thavir short film won national level former judge wishes

Advertisment

டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான குறும்பட போட்டியில் தமிழகத்தில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் எடுக்கப்பட்ட அச்சம் தவிர் குறும்படம் தேசிய அளவில் 3 ம் இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்து படத்திற்கான பல்வேறு உதவிகள் செய்து பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கி உதவிய அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் சார்பில் தேசிய விருது பெற்ற அச்சம் தவிர் குறும்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும், அமைப்பின் கெளரவ தலைவருமான நீதியரசர் எம். கற்பகவிநாயகம் படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

மேலும் அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவருமான ஆர். கே. குமார், பொதுச் செயலாளர் முனைவர் வி. எச்.சுப்ரமணியம் உள்ளிட்டோரும் அச்சம் தவிர் பட குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில் இப்படம் உருவாக காரணமாக இருந்த அமைப்பின் நிறுவனர் தலைவர் ஆர்.கே. குமார் மற்றும் பொதுச் செயலாளர் முனைவர் வி. எச். சுப்பிரமணியத்தையும் பட குழுவினர் கோவை மாவட்டம் கணபதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேரில் சந்தித்து ஆதரவுக்கு பட குழுவின் சார்பில் நன்றியும் , வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து அச்சம் தவிர் குறும் படத்தின் புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் அமைப்பின் சார்பில் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த 10ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர் அனுராஜ்க்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் அச்சம் தவிர் படத்தின் இயக்குநர் குமார் தங்கவேல், இணை இயக்குநரும் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், மாற்றம் அமைப்பின் நிர்வாகியும், நடிகருமான ஆர்.ஏ.தாமஸ், படத்தின் ஸ்கிரிப்ட் ரைட்டர் அங்கமுத்து, நடிகர் அசோக், குமார், ஹரிஹரசுதன் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் துணைத்தலைவர் நாராயண செல்வராஜ் உறுப்பினர் அப்பு ஜெயபிரகாஷ் உதவி தொகை பெற்ற மாணவர் அனுராஜ் அவரது பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Coimbatore Delhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe