assistant locked the female VAO in the room

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனேந்தல் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக(வி.ஏ.ஓ) தமிழரசி என்பவரும், கிராம நிர்வாக உதவியாளராக சங்கீதா என்பவரும் பணியாற்றி வருகின்றனர். இருவருக்கும் இடையே தகராறு இருப்பதால், அடிக்கடி அலுவலகத்தில் முட்டிக்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில் நேற்று(16.12.2024) தமிழரசிக்கும், சங்கீதாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் கோபமான சங்கீதா, விஏஓ தமிழரசியை அலுவலகத்தின் அறையில் வைத்து பூட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தமிழரசி, “ஒரு அரசு அதிகாரியை உள்ளே வைத்து பூட்டுவது எந்த விதத்தில் நியாயம்? கதவை திறந்துவிடு இல்லையின்னா... தாசில்தார்கிட்ட சொல்லி கடும் நடவடிக்கை எடுக்கச் செய்வேன்” என்று அலறியுள்ளார். ஆனால் இதனையெல்லாம் பொருட்படுத்தாத சங்கீதா அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து விஏஓ தமிழரசி உயர் அதிகாரிகளுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். பின்பு அதிகாரிகளின் தலையீட்டின் பேரில் மீண்டும் அலுவலகம் வந்த சங்கீதா பூட்டிய அறையை திறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் சங்கீதா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.