Assistant Inspector of Traffic Police who gave advice to students

தமிழகத்தில் பிப் 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறந்ததையடுத்து மாணவர்கள் அரசு பேருந்துகளில் ஆபத்தை உணராமல் பயணித்து வருகின்றனர். கூட்ட நெரிசல் காரணமாக மாணவர்கள் பலர் படிக்கட்டில் ஆபத்தை உணராமல் பயணிப்பதை சமீப காலாமாக காண முடிகிறது.

Advertisment

இந்நிலையில் விக்கிரவாண்டி பனையபுரம் கூட்டுரோடு போக்குவரத்து பணியில், காவல் உதவி ஆய்வாளர் எம்.குமார ராஜா இருந்தபோது, ஆபத்தான முறையில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டு பயணம் செய்துள்ளனர்.

Advertisment

இதனைப் பார்த்து பேருந்தில் இருந்த கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை இறக்கி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சாலை விதிகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தினார். அதேபோல் கரோனா சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி முகக்கவசம் வழங்கப்பட்டது. மேலும் மாற்று வாகனங்களில் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.