






Published on 14/08/2021 | Edited on 14/08/2021
தமிழக சட்டசபை வரலாற்றில் முதல்முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 250க்கும் மேற்பட்ட பக்கங்களை கொண்ட வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதே போல் முதன் முதலாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளான இன்று (14.08.2021) திமுகவின் 100 நாள் ஆட்சியை கொண்டாடும் வகையில் கலைஞரின் சமாதியில் காய்கறிகளை கொண்டு அலங்கரித்தனர். மேலும் அதனை நேரில் வந்து பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்பு முன்னாள் முதல்வர் கலைஞரின் உதவியாளர் நித்தியானந்தன் செம்மொழியே செந்தமிழே என்ற புத்தகத்தை முதல்வருக்கு வழங்கினார்.