ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூரில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பல்வேறு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக வேலூர் மாநகர பகுதிகளில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், வேலூர் நான்காம் மண்டலத்திற்கு உட்பட்ட காளிகாம்பாள் தெருவில், சாலையில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை அகற்றாமல் அதனோடு சேர்த்து சிமெண்ட் சாலை போடப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அலட்சியமாக பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய உதவிப்பொறியாளர் பழனியை மாநகராட்சி ஆணையர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.