Published on 10/08/2018 | Edited on 27/08/2018

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வேளாண்துறை அலுவலகத்தில் உதவி வேளாண் அலுவலராக பணியாற்றி வருபவர் பாரதிதாசன். அதே ஊரை சேர்ந்த ராஜதுரை என்பவருக்கு உழவு இயந்திரம் மானிய விலையில் வாங்க விண்ணப்பம் வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க மனமில்லாத ராஜதுரை கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் கொடுத்துவிட்டு அவர்களின் வழிகாட்டுதல் படி மை தடவிய ரூ.5 ஆயிரத்தை பாரதிதாசனிடம் கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து விசாரணை செய்து லஞ்சம் வாங்கிய பாரதிதாசனை கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.