பத்திரப்பதிவுக்கு முன்னரே உட்பிரிவு மற்றும் அங்கீகாரம் செய்யும் நடைமுறைக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இனி நிலம், சொத்தை விற்க விரும்புவோர் வட்ட அலுவலகங்களில் சொத்துக்கள் குறித்து சான்று நகலை பெற வேண்டும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் நடவடிக்கை காரணமாக போலி ஆவணங்களை பயன்படுத்தி பத்திரப்பதிவு செய்வதை தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.