/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_586.jpg)
சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் சொத்துக் குவிப்பு வழக்கில் சம்மந்தப்பட்டுள்ள ஏராளமான சொத்துகளை அரசுடைமையாக்க நீதிமன்றம் உத்தவிட்டிருந்த நிலையில், தற்போது ஒவ்வொரு சொத்துகளாக அரசுடைமையாக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் உள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தஞ்சை-1 சார்பதிவாளர் அலுவலக எல்லைக்கு உட்பட்ட தஞ்சை நகரம், 6 வார்டு, பிளாக் நம்பர் 75-ல், வ.உ.சி தெருவில், 26540 சதுர அடி மனையைக் கடந்த 1995ஆம் வருடம் ரூ.11 லட்சத்திற்கு சுதாகரன் - இளவரசி பங்குதாரர்களாக உள்ள லெக்ஸ் பிராப்பர்டி டெவலப்மெண்ட் நிறுவனம் வாங்கியுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_585.jpg)
தஞ்சையில் வாங்கப்பட்ட சொத்துகள் வடசென்னை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த சொத்துகளை நீதிமன்ற உத்தரவுப்படி அரசு சொத்தாக மாற்றப்பட்டுள்ளதாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதே போல இன்னும் பல சொத்துகள் அரசு சொத்துகளாக மாற்றப்பட உள்ளன.
Follow Us