இன்று நிறைவுபெறுகிறது சட்டமன்ற கூட்டத்தொடர்... முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு!

 Assembly session ends today ... Opportunity to release important announcements!

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. அதனைத்தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திமுக தலைமையிலான அரசின், 16வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 21ஆம் தேதி துவங்கியது. கரோனா பரவல் காரணமாக முன்புபோலவே சென்னை கலைவாணர் அரங்கில் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்றுவருகிறது. 21ஆம் தேதி தமிழ்நாடுஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து மூன்று நாட்கள் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தலைமையிலான அலுவல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், ஆளுநர் உரையுடன் தொடங்கிய 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்றுடன் (24.06.2021) நிறைவுபெறுகிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு இன்று தமிழ்நாடுமுதல்வர் மு.க. ஸ்டாலின் பதில் அளிக்கிறார். முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலுரையில் முக்கிய அறிவிப்புகள் இருக்க வாய்ப்பிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

tn assembly
இதையும் படியுங்கள்
Subscribe