kiran

Advertisment

புதுச்சேரி பட்ஜெட் கூட்டம் ஆளுநர் கிரண்பேடி உரையுடன் ஆரம்பிக்கப்பட உள்ளதாக சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் இடைக்கால பட்ஜெட் கூட்டம் நாளை திங்கட்கிழமை தொடங்கிநாளை முதல் வருகின்ற 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உரையுடன் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும், அடுத்து2018- 2019 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்ய இருப்பதாகவும் வின்சென்ட் ராயர்தெரிவித்துள்ளார்.

Advertisment

புதுச்சேரி சட்டசபை கூடும் நிலையில் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நியமன எம்.எல்.ஏக்கள் நியமனம் செல்லும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் அவர்கள் சட்டசபைக்குள் நுழையக்கூடும் என்பதாலும், அசம்பாவிதங்கள் நடக்க கூடும் என்பதாலும் சட்டசபை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.