கரோனா தொற்று காரணமாக கடந்து மார்ச் மாதம் சட்டப்பேரவை கடைசியாக கூடியது. அதன் பிறகு இந்த மாதம் 14ம் தேதி முதல் மீண்டும் சட்டப்பேரவை கூடுகிறது. ஆனால், இம்முறை தலைமைசெயலகத்தில் கூடாமல் கலைவாணர் அரங்கில் கூடுகிறது.

Advertisment

தலைமை செயலகத்தில் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்க முடியாத காரணத்தினால் கலைவாணர் அரங்கத்தில் கூடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக சட்டமன்றக்கூட்டம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று அரங்கம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Advertisment