Advertisment

பிப். 10- ஆம் தேதி சென்னை வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர்!

assembly election chief election commissioner include officers arrive at chennai

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், இந்தியத் தலைமைதேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில், சுஷில் சந்திரா, ராஜிவ் குமார், உமேஷ் சின்ஹா உள்ளிட்ட 8 தேர்தல் ஆணைய அதிகாரிகள் கொண்ட குழு மூன்று நாள் சுற்றுப்பயணமாக பிப்ரவரி 10- ஆம் தேதி அன்று சென்னை வருகிறது.

Advertisment

பிப்ரவரி 10- ஆம் தேதி அன்று காலை 08.15 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படும் இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு, காலை 11.00 மணிக்கு சென்னை வருகிறது.

Advertisment

அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 10- ஆம் தேதி நண்பகல் 12.15 மணிக்கு சென்னையில் தமிழக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளும் தலைமை தேர்தல் ஆணையர், மாலை தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி மற்றும்தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசிக்கிறார்.

பின்னர், பிப்ரவரி 11- ஆம் தேதி தமிழக தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் ஆகியோருடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தவுள்ளார். அதன் பிறகு, செய்தியாளர்களைச் சந்திக்கும் அக்குழு, பிப்ரவரி 11- ஆம் தேதி அன்று மாலையே புதுச்சேரி மாநிலத்திற்குப் புறப்பட்டுச் செல்கிறது.

பிப்ரவரி 11, 12 ஆகிய தேதிகளில் புதுச்சேரி மாநிலத்தின் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளும் தேர்தல் ஆணையக்குழு, பிப்ரவரி 12- ஆம் தேதி மீண்டும் செய்தியாளர்களைச் சந்திக்கிறது. அதைத் தொடர்ந்து, அக்குழு சென்னை வழியாகக் கேரளா செல்கிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களில் தேர்தல் ஆயத்தப் பணிகள் தொடர்பாக பிப்ரவரி 10- ஆம் தேதி முதல் பிப்ரவரி 12- ஆம் தேதி வரை தொடர்ந்துமூன்று நாட்கள் தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு நேரடியாக ஆலோசிப்பது குறிப்பிடத்தக்கது.

Chennai election commision of india sunil arora
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe