Assembly Election ... Additional Co-Election Chief Electoral Officers Appointed!

Advertisment

வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் தமிழகத்தில் சூடு பிடித்திருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை,தொகுதிப் பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் என களத்தில் தீவிரமாக செயலாற்றி வருகின்றன.அதேபோல்தேர்தல் ஆணையம்சார்பிலும்தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கான தீவிரஆலோசனைகள் சூடுபிடித்துள்ளன. தகவல்களின்படி ஏப்ரல் மாதஇறுதியில் தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவும்,மே முதல் வாரத்தில் வாக்கு எண்ணிக்கையும் இருக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

இன்று (18.02.2021) மாலை தமிழகதலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு தலைமையில் ஆலோசனைக் கூட்டம்நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில்,இரண்டு கூடுதல் இணைத் தேர்தல் அதிகாரிகளைத் தமிழகஅரசு நியமித்துள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் தலைமை தேர்தல் அதிகாரியுடன் இணைந்து பணியாற்றஇணை அதிகாரிகள் சேர்க்கப்படுவது வழக்கமான நடைமுறைதான். அதன்படிவேளாண்துறை இணைச்செயலாளராக இருந்த ஆனந்த் ஐ.ஏ.எஸ், சுகாதாரத்துறையின் இணைச் செயலாளராக இருந்தஅஜய் யாதவ் ஐ.ஏ.எஸ் ஆகியோர்கூடுதல்இணைத் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.